விஜயின் `ஜன நாயகன்’ படத்திற்கு சான்றிதழ் கிடைப்பதில் ஏற்கனவே சிக்கல் நிலவி வரும் சூழலில், இப்போது கே.வி.என் தயாரித்துள்ள இன்னொரு படத்துக்கும் சான்றிதழ் தொடர்பாக சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய். அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்துள்ள அவர் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை தொடங்கி எதிர்வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகிறார். அவர் அரசியல் பக்கம் கவனம் செலுத்தியதால் தனது கடைசி படமாக ‘ஜன நாயகன்’ இருக்கும் என அறிவித்தார்.