விஜய்யின் ஜனநாயகன் படக் கசிவு மற்றும் விதிமீறல் காரணமாகப் படத்தொகுப்பாளர் பிரதீப் ராகவ்வை தென்னிந்திய திரைப்பட தொகுப்பாளர் சங்கம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.

நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் சட்டவிரோதமாக கசிந்த விவகாரம் தொடர்பாக, தென்னிந்திய திரைப்பட தொகுப்பாளர் சங்கம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. சங்கத்தின் விதிகளை மதிக்காமல் செயல்பட்டதாகக் கூறி, படத்தொகுப்பாளர் பிரதீப் ராகவ் சங்கத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.