கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான இந்த படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படத்தின் ப்ரமோஷன் பணிகளை படக்குழுவினர் தொடங்கியுள்ளனர். 

தமிழ் சினிமாவில் தற்போ பிஸியாக வலம் வரும் முக்கிய நடிகர்களில் ஒருவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் கர. இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் தனுஷ் கலந்துகொண்டுள்ளார். 

போர் தொழில் என்ற க்ரைம் த்ரில்லர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் இயக்குனராக மாறியவர் தான் இயக்குனர் விக்னேஷ் ராஜா. சரத்குமார் – அசோக் செல்வன் நடித்த இந்த படம் பெரிய வெற்றியை பெற்ற நிலையில், அடுத்து தனுஷ் நடிப்பில் படம் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரித்துள்ள நிலையில், படத்திற்கு கர என்று பெயரிடப்பட்டுள்ளது, 

தனுஷ் – மமிதா பைஜூ, கருணாஸ், கே.எஸ்.ரவிக்குமார், சுராஜ் வெஞ்சிரமூடு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இந்த படம் வரும் ஏப்ரல் 30-ந் தேதி வெளியாக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான இந்த படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படத்தின் ப்ரமோஷன் பணிகளை படக்குழுவினர் தொடங்கியுள்ளனர்.