முதல்முறையாக வாக்களிக்கப் போகிறீர்களா? வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது முதல், வாக்குச் சாவடியில் வாக்களிக்கும் முறை வரை நீங்க தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களும் அடங்கிய 2026 சட்டமன்றத் தேர்தல் வழிகாட்டி பதிவு.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. மொத்தம் 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். 2.93 கோடி பெண்கள், 2.80 கோடி ஆண்கள், 3-ம் பாலினத்தவர் 7,728 பேர் வாக்களிக்க தகுதி பெற்று உள்ளனர். எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு பின் 40 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதால் வாக்கு சதவிகிதம் அதிகரிக்க வாய்ப்பு என எதிர்பார்க்கப்படுகிறது.