தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நடைபெற்று வரும் அரசியல் கட்சிகளின் தீவிர பிரச்சாரம் நாளை (ஏப்.21) மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. நாளை மாலை பிரச்சாரம் ஓய்ந்தது முதல் வாக்குப்பதிவு நடைபெறும் 23-ம் தேதி மாலை 6 மணி வரையிலான 48 மணி நேரத்தை அமைதி நேரமாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.