வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கும், வாக்குச் சாவடிகளிலிருந்து அழைத்துச் செல்வதற்கும் வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாகனத்தை வாடகைக்கு எடுப்பதற்கு அல்லது வாங்குவதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு எந்தவொரு வேட்பாளரும் அனுமதிக்கக்கூடாது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு வருகிற 23-ம் தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெற உள்ளது. இதனை ஒட்டி அரசியல் கட்சியின் தலைவர்கள் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள். தேர்தல் களத்தில் தி.மு.க தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி, அ.தி.மு.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவுகிறது. தமிழகம் முழுவதும் வீதி, வீதியாக தீவிர பிரசாரம் நடந்து வருகிறது. அரசியல் கட்சிகளின் இந்த அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் ஓய்கிறது.
