‘கேண்டிடேட்ஸ்’ தொடரில் வைஷாலி பெற்ற வெற்றி, கடந்த மூன்று ஆண்டுகளில் அவர் வென்றுள்ள மூன்றாவது முக்கியத்துவம் வாய்ந்த போட்டி இதுவாகும். 24 வயதான அவர், மிகவும் சவாலான ‘ஃபிடே கிராண்ட் ஸ்விஸ்’ தொடரை இருமுறை வென்றுள்ளார்.

கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிகள் சைப்ரஸ் நாட்டின் பாபோஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனை, நடப்பு சாம்பியன்களுடன் மோதி, அடுத்த சாம்பியன் ஆகும் வாய்ப்பை பெறுவர். இந்நிலையில், இந்த கேண்டி டேட்ஸ் செஸ் தொடரில், நேற்று புதன்கிழமை இறுதிச் சுற்று நடைபெற்றது. இந்த இறுதிச் சுற்றில் ரஷ்யாவின் கேத்ரினா லாக்னோ தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் வைஷாலி மோதினர்.