விஜயை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநர் மாளிகைக்கு வெளியே த.வெ.க தொண்டர்கள் பதாகையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான த.வெ.க கட்சி 34.92% வாக்குகள் பெற்று 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனி பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவைப்படும் நிலையில் த.வெ.க-விடம் 108 இடங்கள் மட்டுமே உள்ளன. அதிலும் விஜய் போட்டியிட்ட பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் ஒன்றில் ராஜினாமா செய்தால் 107 தொகுதிகள் தான் இருக்கும்.