கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் பொது இடங்களில் சுற்றித்திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்துவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகளுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெருநாய்களின் தொல்லை மற்றும் அவற்றின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றம் இன்று ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தெருநாய்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்புகளையும், வழிகாட்டுதல்களையும் செயல்படுத்துவதில் ஏன் இவ்வளவு தாமதம் ஏற்படுகிறது என்று தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இந்த விவகாரத்தில் அரசு உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் என்பதை நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.