ஓட்டு வாங்குவதற்காக தம் கொள்கைகளில் பல சமரசங்களை செய்து கொண்டு, தங்களை தாழ்த்தி கொண்டுள்ளனர். வரும் காலத்தில், தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் இணைந்து ஒரே கட்சியாக செயல்பட்டால் கூட ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்று பெ.சண்முகம் கூறி உள்ளார்.

தமிழக அரசியல் களம் புதிய திருப்பங்களை நோக்கி நகர்ந்து வரும் வேளையில், வருங்காலத்தில் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் இணைந்து ஒரே கட்சியாகச் செயல்பட்டால் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) மாநிலச் செயலாளர் சண்முகம் தனது X தளத்தில் பதிவிட்டுள்ள கருத்து, அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.