கல்லூரி வாழ்க்கையில் எதிர்காலம் குறித்த பயத்தை வெல்ல விடாமுயற்சி தேவை என்று குறிப்பிட்ட அமைச்சர் ரமேஷ், அதற்கு “தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்” என்ற குறளை மேற்கோள் காட்டினார்.

திருச்சி ஸ்ரீரங்கம் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், மாணவர்களுக்குப் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியதோடு, தனது எளிய குடும்பப் பின்னணி மற்றும் பெற்றோரின் உழைப்பு குறித்து நெகிழ்ச்சியுடன் உரையாற்றினார்.