திருச்சியில் இரு வேறு இடங்களில் நடைபெற்ற விபத்துக்களில் கல்லூரி மாணவர் மற்றும் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி திருவெறும்பூர் காந்தி நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் குத்தூஸ். இவரது மகன் அர்ஷீத் (வயது 21). இதேபோன்று காந்திநகர் ஆறாவது தெரு பகுதியை சேர்ந்தவர் மார்க்கோ இவரது மகன் பிரடி (வயது 21). இருவரும் திருச்சியை அடுத்த துறையூர் தனியார் பொறியியல் கல்லூரியில், இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில்  சேர்ந்துள்ளார்கள். இதையடுத்து இருவரும் கல்லூரி திறக்கும் முதல் நாளான இன்று  ஒரே இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு புறப்பட்டனர். 

அப்பொழுது இரு சக்கர வாகனத்தை பிரடி ஓட்டினார், பின் சீட்டில் அர்ஷீத் அமர்திருந்தார். இவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில், திருவெறும்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது அரியமங்கலம் எஸ்.ஐ.டி மைதானம் எதிரே, பின்னால் வந்த ஆமினி பேருந்து இவர்களை முந்திச் செல்ல முயன்றது. அதே நேரத்தில், எதிர்புறம் ஒருவழிப்பாதையில் ஆட்டோ ஒன்றும் வந்துள்ளது.