TN Assembly Election Updates: கூப்பனை நம்பி ஓட்டு கேட்கிறார் ஸ்டாலின் – அன்புமணி காட்டம்
Tamil Nadu Assembly Election Live Updates: தமிழகத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலை ஒட்டிய அரசியல் நிகழ்வுகளை தெரிந்துகொள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழுடன் இணைந்திருங்கள்.

தமிழக அரசியல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 8 நாட்கள் மட்டுமே இருக்கிறது. அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் முழுவீச்சில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் ஏப்.23 அன்று நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கான வாக்காளர் தகவல் சீட்டுகள் விநியோகம் செய்யும் பணியை தலைமைத் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இந்த வாக்காளர் தகவல் சீட்டுகளில் வாக்காளர்களின் விவரங்கள் வாக்குச்சாவடி மையம் அமைந்துள்ள இடம், வாக்குப்பதிவு நாள் மற்றும் நேரம் மற்றும் வாக்குப்பதிவு நாள் அன்று வாக்காளர் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை போன்ற விவரங்கள் இடம் பெற்றுள்ளது. வாக்காளர் விவரங்களை விரைவாக கண்டறிவதற்கான கியூஆர் குறியீடும் இடம் பெற்றுள்ளது.
