இறால் தொழிற்சாலையில் திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதில் 65-க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே இறால் தொழிற்சாலையில் திடீரென  அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதில் அங்கு பணியாற்றி வந்த வட மாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட 65-க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்துள்ளனர். வாயு கசிவில் பாதிக்கப்பட்ட நபர்கள் உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.  இதில் மோசமான நிலையில் இருந்த 6 பேர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

தகவறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  தீயணைப்பு துறையினர் மீட்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அங்கு விரைந்துள்ள மருத்துவ குழுவும் முதலுதவி சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அப்பகுதியில் உள்ளவர்களுக்கு வாயு கசிவால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்றும் மருத்துவர் குழு பரிசோதனை மேற்கொண்டு வருகிறது.