‘தி.மு.க கூட்டணி ஆட்சியை இழந்திருந்தாலும், பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க-வைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எங்களது முதன்மை நோக்கத்தில் 100% வெற்றி பெற்றுள்ளோம்’ என வி.சி.க தலைவர் திருமாவளவன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் விஜய் தலைமையிலான த.வெ.க வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அதே நேரத்தில் தி.மு.க கூட்டணி 73 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதால் ஆட்சியை இழந்துள்ளது. இந்நிலையில், தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் அங்கம் வகிக்கும் வி.சி.க தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் சென்னையில் அண்ணா அறிவாலயத்துக்கு சென்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்புக்கு பின் திருமாவளவன், பெ.சண்முகம், வீரபாண்டியன் ஆகிய மூன்று பேரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது திருமாவளவன் கூறியதாவது:
