கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு; 200 பணியிடங்கள்; தகுதி, தேர்வு முறை என்ன? விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் இங்கே!!

சென்னை கல்பாக்கத்தில் அமைந்துள்ள அணுமின் நிலையத்தின் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 200 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 19.08.2026

TRADE APPRENTICES

காலியிடங்களின் எண்ணிக்கை: 200

Fitter – 46

Turner – 7

Machinist – 10

Electrician – 22

Mechanical Machine Tool Maintenance – 1

Electronic Mechanic – 15

Instrument Mechanic – 18

Draughtsman (Mechanical) – 12

Mechanic Refrigeration & Air Conditioning – 9

Plumber – 2

Welder (Gas &Electric) – 14

Horticulture Assistant – 3

Wood Work Technician/ Carpenter – 4

Mason / Civil Mistry – 4

Book Binder – 1

PASAA (Programming and System Administration Assistant) – 19

Photography – 1

Process Plant Operator – 12

கல்வி தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவுகளில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும். 

வயது தகுதி: 19.08.2026 அன்று 18 முதல் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின் படி எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

ஊக்கத்தொகை: ரூ. 11,040

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.