Haj Pilgrimage Subsidy Tamil Nadu பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறைக்கு ஒட்டுமொத்தமாக ரூ.1,700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நடப்பு நிதி ஆண்டுக்கான (2026-27) பொது பட்ஜெட்டை, தமிழக சட்டப் பேரவையில் தாக்கல் செய்த நிதியமைச்சர் மரிய வில்சன், சிறுபான்மையினர் நலன்கள் தொடர்பான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
*தமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டி மூலம் முதன்முறையாக புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு வழங்கப்படும் மானியத் தொகை 25,000 ரூபாயிலிருந்து 35,000 ரூபாயாக உயர்த்தப்படும்.
*கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்கள் ரூ.1.05 கோடி நிதி ஒதுக்கீட்டில் கூடுதலாகத் தொடங்கப்படும்.