விஜய் தலைமையிலான த.வெ.க அரசு தங்களது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இதில் மகளிருக்கு பல அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு 2026 -2027 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு தாக்கல் செய்துள்ளது. இதில் மகளிருக்கு பல அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைக்கு ரூ.9,818 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
மகளிருக்கான திட்டங்கள்
- முத்திரைத்தாள் வரி மற்றும் பதிவுக் கட்டணத்தில் முழு விலக்கு
- அளிக்கப்படும்.
- கருவுற்ற பெண்களுக்கான சேவை மற்றும் உதவி மையங்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்படும்.
- மகப்பேறு நாள் நெருங்கும் வேளையில் இங்கு தங்கி இருந்து பயன் பெறலாம்.
- கட்டணமில்லாமல் உணவு மற்றும் உதவிகள், தொடர் மருத்துவ கண்காணிப்பு உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும்.
- இதற்காக மொத்தமாக ரூ.23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
அண்ணன் சீர்
பெண்களின் திருமண நன்னாளில் 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப் புடவை வழங்கப்படும்.
வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டம்
- 100% மானியத்தில் 5 ஆடுகள் வழங்கப்படும்.
- கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் என 30,000 பயனாளிகள் இதன் மூலம் பயன்பெறுவார்கள்.
கறவை மாடுகள் வழங்கும் திட்டம்
- ஒவ்வொரு ஆண்டும் 10,000 தகுதி வாய்ந்த பெண்களுக்கு கறவை மாடுகள் விலை இல்லாமல் வழங்கப்படும்.
- பால் உற்பத்தி அதிகரிப்பு, ஊரக பகுதிகளில் வாழும் பெண்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படும்.
- இதற்காக ரூ.57 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்
- தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி அண்ணா பிறந்தநாளில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
- இதற்காக ரூ.560 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக பேரவையில் அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.
- மகளிர் சுய உதவிக் குழுக்களை குறுந்தொழில் நிறுவனங்களாக மேம்படுத்தும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
- இந்த ஆண்டில் ரூ.38,000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- தொழில் முனைவோரின் செயல் திறனை வெளிப்படுத்தும் சுய உதவிக் குழு நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் முதலீட்டு மானியம் வழங்கப்படும்.
திருநர்களுக்கான அறிவிப்பு
- திருநர்களுக்கு சமூக மற்றும் பொருளாதார அதிகாரமளிப்பை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் பல்வேறு தொழில்களில் திறன் பயிற்சி வழங்கப்படும்.
- அவர்கள் தொழில் தொடங்குவதற்கும், நிலையான வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கும் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வசதியும் வழங்கப்படும்.
- நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக 50,000 ரூபாய் வரை சுயதொழில் மானியத்துடன் வங்கிக் கடன் பெற ஊக்குவிக்கப்படுவார்கள்.
- சமூக மற்றும் குடும்ப சவால்களை எதிர்கொள்ளும் திருநர்களுக்கு பாதுகாப்பான தங்கும் இடம், உணவு, ஆலோசனை மற்றும் மறு வாழ்வு ஆதரவை வழங்குவதற்காக 5 மாவட்டங்களில் அரண் தங்குமிட வசதிகள் நிறுவப்படும்.
- கல்வி, வேலை வாய்ப்பு மருத்துவ சிகிச்சை தேர்வுகள் மற்றும் பயிற்சி நிகழ்ச்சிகளுக்காக பிற நகரங்களுக்கு பயணம் செய்யும் திருநர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் 15 மாவட்டங்களில் குறுகிய கால தங்குமிட வசதிகளும் நிறுவப்படும்.
