TN Farm Loan Waiver: கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 30,000 பயனாளிகளுக்கு 100% மானியத்தில் தலா 5 ஆடுகள் (வெள்ளாடு/செம்மறி ஆடு) வழங்கப்படும்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2026-27 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், வேளாண்மை, கால்நடைப் பராமரிப்பு மற்றும் மீன்வளத் துறைகளுக்காகவும் விவசாயிகள் மற்றும் கிராமப்புற மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் பல்வேறு புதிய திட்டங்களும் நிதியொதுக்கீடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.