பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசி உள்ளதாக கூறி உதயநிதி ஸ்டாலின் மீது மகளிர் ஆணையத்தில் த.வெ.க சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது.

காவிரி விவகாரம் தொடர்பாக, தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன்பு த.வெ.க அரசை கண்டித்து தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 8 மாவட்டங்களைச் சேர்ந்த தி.மு.க-வினர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் ஜோசப் விஜயை சரமாரியாக விமர்சித்தார்.