கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து யூ டியூப் சேனலில் அவதூறாக பேசியதாக பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் மீது சென்னை சைபர் குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் தற்போதைய முதலமைச்சரும் த.வெ.க தலைவருமான விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து யூ டியூப் சேனலில் அவதூறாக பேசியதாக பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் மீது சென்னை சைபர் குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு நக்கீரன் கோபால் ஒரு யூ டியூப் சேனலுக்கு பேட்டியளித்ததாக தெரிகிறது. அதில், கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
