ஆகஸ்ட் 5-ஆம் தேதி தமிழ்நாட்டின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. த.வெ.க அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் என்பதால் எதிர்பார்ப்புகள் மேலோங்கி உள்ளன.

விஜய் தலைமையிலான த.வெ.க அரசு, தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 17-வது சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. த.வெ.க-வின் முதல் சட்டசபைக் கூட்டம் ஜூன் 18-ஆம் தேதி ஆளுநர் அர்லேகர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜூன் 19, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்தது.