மின்சார பேருந்துகள் அடிக்கடி பழுதாகுகிறது, நடுவழியில் சில பேருந்துகள் பழுதாகி நிற்கின்றன. இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் குறிப்பிடப்பட்ட தூரமான 200 கி.மீ தூரத்தை எட்ட முடியாமல் பேருந்துகள் தவிக்கின்றன.

சென்னை மாநகராட்சியில் சுமார் 625 மின்சார பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மின்சார பேருந்தும் குறைந்தபட்சம் 200 கிலோ மீட்டர் வரை சென்னைக்குள் இயக்கப்பட வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் அரசு மற்றும் தனியார் கூட்டாக இந்த மின்சார பேருந்துகளை இயக்கி வருகின்றனர்.