இந்த கூட்டத்திற்கு வருகை தந்த சட்டமன்ற உறுப்பினர் சுகுமாருக்கு மரியாதை நிமித்தமாக மாலை அணிவிக்க, அக்கட்சியின் ஊராட்சி செயலாளரான வசந்தி என்ற பெண் நிர்வாகி சென்றுள்ளார்.

கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உட்கட்சி பூசல் வெட்டவெளிச்சமாகியுள்ளது. சூலூர் சட்டமன்ற உறுப்பினர் சுகுமார் முன்னிலையில், அக்கட்சியின் பெண் நிர்வாகி ஒருவரின் ஆடை கிழிக்கப்பட்டு, தகாத வார்த்தைகளால் பேசி தாக்கப்பட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.