குடும்ப பின்னணியை வைத்து பாக்யராஜ் இயக்கி நடித்த ஒரு படத்தில் ஒரு காட்சியை கட் செய்யுமாறு, சென்சார் அதிகாரிகள் பரிந்துரை செய்ய, அதற்கு முடியாது என்று பாக்யராஜ் கடுமையாக பிடிவாதத்துடன் தனது கருத்தை முன் வைத்துள்ளார்.

இன்றைய காலக்கட்டத்தில் ஒரு சினிமா எடுப்பது மட்டும் அல்ல அதை திரையரங்குக்கு கொண்டு வருவது என்பது அதைவிட சிரரமான ஒரு விஷயமாக மாறிவிட்டது. குறிப்பாக எம்.ஜி.ஆர் சிவாஜி காலத்தில் இருந்த சென்சார் பிரச்சனை இப்போது அதிக அளவு இல்லை என்றாலும் சென்சார் சான்றிதழ் பெற்றாமல் தான் படம் வெளியாகும் என்ற நிலை இப்போதும் இருக்கிறது. 

தமிழக முதல்வர் விஜய் நடித்துள்ள கடைசி படமாக ஜன நாயகன் சென்சார் சான்றிதழ் பிரச்னை காரணமாக கடந்த 6 மாத காலமாக வெளியாகாமல் சிக்கலில் சிக்கியுள்ளது. அதேபோல் குடும்ப பின்னணியை வைத்து பாக்யராஜ் இயக்கி நடித்த ஒரு படத்தில் ஒரு காட்சியை கட் செய்யுமாறு, சென்சார் அதிகாரிகள் பரிந்துரை செய்ய, அதற்கு முடியாது என்று பாக்யராஜ் கடுமையாக பிடிவாதத்துடன் தனது கருத்தை முன் வைத்துள்ளார். அந்த படம் தான் தூறல் நின்னு போச்சு திரைப்படம். 

1982-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் பாக்யராஜ், சுலோக்ஷனா, நம்பியார், செந்தாமரை, செந்தில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பாண்டியராஜன் ஒரு சிறிய கேரக்டரில் நடித்திருப்பார். இளையராஜா இசையில் இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக, பூபாலம் இசைக்கும், தங்க சங்கிலி மின்னும் பைங்கிளி, என் சோக கதையை கேளு தாய்குலமே உள்ளிட்ட பாடல்கள் இன்றைக்கும் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.