சென்னையில் உள்ள பெல் இந்தியா நிறுவனத்தில் அருமையான வேலை வாய்ப்பு; 9 பணியிடங்கள்; இன்ஜினியரிங் உடனே அப்ளை பண்ணுங்க; தேர்வு முறை இதுதான்.

சென்னையில் உள்ள பெல் இந்தியா நிறுவனம், இன்ஜினியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்ஜினியரிங் படித்தவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மத்திய அரசின் நவரத்னா அந்தஸ்து உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட். இந்த நிறுவனத்தில் பயிற்சி பொறியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 9 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 01.07.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Trainee Engineer – I (Mechanical)
காலியிடங்களின் எண்ணிக்கை: 9
கல்வித் தகுதி: B.E./ B.Tech/ B.Sc Engg. in Mechanical படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 01.06.2026 அன்று 28 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம்: ரூ. 30,000 – 40,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://jobapply.in/BEL2026ChennaiEATTechTE என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவு, இ.டபுள்யூ.எஸ், ஓ.பி.சி பிரிவினருக்கு ரூ. 177, எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.07.2026
இந்த வேலை வாய்ப்பு தொடர்பான மேலும் விவரங்களுக்கு கீழே அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்வையிடவும்.
