தமிழ்நாடு அரசின் கோவை மண்டல நில அளவை பதிவேடுகள் துறை வேலை வாய்ப்பு; 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; தேர்வு முறை இதுதான்.

கோவை நில அளவை பதிவேடுகள் துறை, மண்டல துணை இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள பதிவுரு எழுத்தர் பணியிடத்தை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பணியிடம் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 09.07.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
பதிவுரு எழுத்தர் (Record Clerk)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுதப் படிக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும். கணினி பற்றிய அடிப்படை அறிவு இருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 01.07.2026 அன்று 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் தமிழக அரசு விதிகளின்படி பி.சி, எம்.பி.சி பிரிவினர் 32 வயது வரையிலும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் 35 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.
