த.வெ.க அரசின் ‘ஊழலற்ற நிர்வாகம்’ என்ற முழக்கத்திற்குச் சவால் விடும் வகையில், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இடமாற்றங்களில் பெரும் அதிகார துஷ்பிரயோகம் நடந்துள்ளதாக வி.சி.க பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

வி.சி.க பொருளாளரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான எஸ்.எஸ்.பாலாஜி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் இட மாற்றத்தில் அமைச்சரின் மாமனார் தலையீடு நடந்திருப்பதாக அதிர்ச்சி புகார் கூறியுள்ளார். மேலும், இதில் முதலமைச்சர் விஜய் உடனே தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த தி.மு.க ஆட்சிக் காலத்தில் திருப்போர் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்தவர் வி.சி.க-வைச் சேர்ந்த எஸ்.எஸ்.பாலாஜி. 2026-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட இவருக்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் வாய்ப்பு அளிக்கவில்லை. இந்த தேர்தலில் வி.சி.க 8 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், திண்டிவனம் மற்றும் காட்டுமன்னார்கோயில் ஆகிய 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க அமைச்சரவையில் திண்டிவனம் வி.சி.க எம்.எல்.ஏ வன்னியரசு சமூகநீதித் துறை அமைச்சராக உள்ளார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, எஸ்.எஸ். பாலாஜிக்கு வி.சி.க-வில் பொருளாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
த.வெ.க அமைச்சரவையில் வி.சி.க அங்கம் வகித்து வரும் நிலையில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் இட மாற்றத்தில் அமைச்சரின் மாமனார் தலையீடு நடந்திருப்பதாக வி.சி.க பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி அதிர்ச்சி புகார் கூறியுள்ளார். மேலும், இதில் முதலமைச்சர் விஜய் உடனே தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
