தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் அனுமதியின்றி ‘ரீல்ஸ்’ மற்றும் வீடியோக்கள் எடுப்பதற்குச் சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது.

அரசு மருத்துவமனைகளில் ரீல்ஸ், வீடியோக்கள் எடுக்க சுகாதாரத் துறை தடை விதித்துள்ளது. விதிகளை மீறி அரசு மருத்துவமனைகளில் ரீல்ஸ், வீடியோக்கள் எடுத்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

மேலும், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைகளை அனுமதியின்றி ரீல்ஸ் வீடியோ எடுப்பது குற்றம் என்பதால் அனுமதியின்றி எடுக்கப்பட்ட வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் நோயாளிகளின் தனியுரிமையைப் பாதித்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சைகளை முறையான அனுமதியின்றி வீடியோ பதிவு செய்வது சட்டப்படி குற்றமாகக் கருதப்படும் என்றும், அவ்வாறு ஏற்கனவே பதிவேற்றப்பட்ட வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, பொதுமக்களின் இந்தச் செயல் நோயாளிகளின் தனியுரிமையைப் (Privacy) பாதிக்கும் பட்சத்தில், விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் த.வெ.க ஆட்சி அமைந்ததில் இருந்து அக்கட்சியினர் அரசு மருத்துவமனை, பள்ளிகள் ஆகிய பொது இடங்களில் ரீல்ஸ், வீடியோக்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது. த.வெ.க-வினர் அரசு மருத்துவமனைகளில் ரீல்ஸ், வீடியோக்கள் எடுப்பதால் நோயாளிகள், பொதுமக்கள், மருத்துவப் பணியாளர்கள் தொந்தரவுக்கு உள்ளாவதாக தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் த.வெ.க-வைக் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில் ரீல்ஸ், வீடியோக்கள் எடுக்க சுகாதாரத் துறை தடை விதித்துள்ளது. விதிகளை மீறி அரசு மருத்துவமனைகளில் ரீல்ஸ், வீடியோக்கள் எடுத்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் அனுமதி மற்றும் முறையான அனுமதியின்றி ரீல்ஸ் மற்றும் வீடியோக்கள் எடுப்பதற்குச் சுகாதாரத்துறை முற்றிலும் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மருத்துவமனைகளில் சிகிச்சைகள் மற்றும் மருத்துவர்களின் பணிகளை அனுமதியின்றி வீடியோவாகப் பதிவு செய்வது சட்டப்படி குற்றமாகும் என்றும், அவ்வாறு ஏற்கனவே சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

குறிப்பாக, இந்த வீடியோக்கள் நோயாளிகளின் தனியுரிமையைப் பாதிக்கும் வகையில் அமைந்தால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி மிகக் கடுமையான ஒழுங்கு மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனச் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.