நடிப்பையும் தாண்டி, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் கல்விக்காக அவர் நடத்தி வரும் ‘அகரம் அறக்கட்டளை’ தொடங்கி 25 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்விக்கு அவர் ஒளியேற்றியுள்ளார்.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய், அண்மையில் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கி முழுநேர அரசியலில் ஈடுபட்டார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களை வென்று ஆட்சியைப் பிடித்து, விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். சினிமாவில் இருந்து பல நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்கினாலும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்குப் பிறகு நேரடியாக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த பெருமை விஜய்யையே சேரும்.