இருவரையும் ஒன்றாகத் திரையில் பார்க்கப் போவதால், கே.எச். ஆர்.கே திரைப்படம் ஒட்டுமொத்தத் திரை உலகிற்கும் ஒரு உண்மையான கொண்டாட்டமாக இருக்கும்,

சினிமாவில் அறிமுகமான புதிதில் ரஜினிகாந்த் – கமல்ஹாசன் இருவரும் இணைந்து நடித்திருந்த நிலையில், ஒரு கட்டத்திற்கு மேல் இருவரும் தனியாக நடிக்க தொடங்கினர். தற்போது கிட்டத்தட்ட ஐந்து தசாப்தங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் மற்றும் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் ஆகிய இருவரையும் மீண்டும் இணைக்கும் வகையிலான ஒரு படத்தை நெல்சன் இயக்க உள்ள நிலையில், இந்த படத்தில் ஸ்ருதி ஹாசன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்த தகவலை ஸ்ருதி ஹாசன் மறுத்துள்ளார்.