நடிகை த்ரிஷாவின் ஆடை ரகசியம் குறித்து அவரது ஆடை வடிவமைப்பாளர் மனம் திறந்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. 40 வயதை கடந்தாலும் இன்னும் திரையுலகில் இவரது மார்க்கெட் குறையவில்லை. பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘கருப்பு’ திரைப்படத்தில் த்ரிஷா ஹீரோயினாக நடித்துள்ளார்.
கருப்பு’ திரைப்படம் மே 14-ஆம் தேதி வெளியாகும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏற்பட்ட நிதி பிரச்சனை காரணமாக குறிப்பிட்ட நாளில் ரிலீஸ் செய்ய முடியாமல் போனது. எனவே, இத்திரைப்படம் மறுநாள் மே 15-ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்தில், நடிகர் சூர்யா கருப்பசாமியாக நடித்துள்ளார்.