திருப்பதியில் இருந்தபடி வீடியோ வெளியிட்டுள்ள சமுத்திரக்கனி, “வணக்கம், பல தடைகளை தாண்டி தற்போது ஆட்சி அமைக்க இருக்கும் என் அன்புச் சகோதரர் தளபதி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.” என்று கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) 234 தொகுதிகளில் 108 இடங்களில் அபார வெற்றியைப் பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்து இருக்கிறது. அக்கட்சி ஆட்சியை அமைக்க 118 இடங்கள் தேவை என்கிற நிலை இருந்த சூழலில், தி.மு.க உடனான கூட்டணியை முறித்துக் கொண்ட காங்கிரஸ் அதன் 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவை வழங்கியது.