“விஜய் தான் அடுத்த எம்.ஜி.ஆர். இதை பாண்டிச்சேரியில் உள்ள அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீங்களாக வந்து விஜய்க்கு ஆதரவு கொடுங்கள்” என்று நடிகர் தம்பிராமையா வேண்டுகோள் விடுத்திருக்கிறார். 

தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) 234 தொகுதிகளில் 108 இடங்களில் அபார வெற்றியைப் பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்து இருக்கிறது. அக்கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தி.மு.க உடனான கூட்டணியை முறித்துக் கொண்ட காங்கிரஸ் அதன் 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவை வழங்கி இருக்கிறது.