பொதுவாக ஒரு மாநிலத்தில் எந்தத் தொகுதியில் வெற்றி பெறும் கட்சி ஆட்சியைப் பிடிக்கிறதோ, அந்தத் தொகுதிகள் ‘பெல்வெதர் தொகுதிகள்’ என்று அழைக்கப்படுகின்றன. தமிழகத்தில் மொத்தம் 54 பெல்வெதர் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில்,  அரசியல் ஆய்வாளர் கோலாகல ஸ்ரீநிவாஸின் அலசல் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தமிழகத்தின் ‘பெல்வெதர்’ தொகுதிகள் சொல்லும் முடிவுகள் மற்றும் எக்ஸிட் போல்களுக்கு பின்னால் இருக்கும் ‘பெட்டிங்’ மார்க்கெட் குறித்து அவர் அதிர்ச்சியூட்டும் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

பெல்வெதர் தொகுதிகள் (Bellwether Constituencies) என்றால் என்ன?

பொதுவாக ஒரு மாநிலத்தில் எந்தத் தொகுதியில் வெற்றி பெறும் கட்சி ஆட்சியைப் பிடிக்கிறதோ, அந்தத் தொகுதிகள் ‘பெல்வெதர் தொகுதிகள்’ என்று அழைக்கப்படுகின்றன. தமிழகத்தில் மொத்தம் 54 பெல்வெதர் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் 1970-களில் இருந்தே மாறாத முடிவுகளைத் தரும் 5 ‘கோல்ட் ஸ்டாண்டர்ட்’ தொகுதிகளும் அடங்கும்.

டெல்லியைச் சேர்ந்த பிரபல கருத்துக்கணிப்பாளர் ஜே.வி.சி ஸ்ரீராம் வழங்கிய தரவுகளின்படி, இந்த 54 தொகுதிகளில் கட்சிகளின் நிலைமை பின்வருமாறு: