CBSE 12th Result LIVE 2026: சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 17 முதல் ஏப்ரல் 10, 2026 வரை நடைபெற்றன. இந்த தேர்வு முடிவுகளை cbse.gov.in மற்றும் results.cbse.nic.in ஆகிய இணையதளங்களில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

CBSE 12th Result 2026: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), 2026-ஆம் ஆண்டிற்கான 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (ஏப்ரல் 29) வெளியாக உள்ளது. தேர்வு முடிவுகள் வெளியானதும், மாணவர்கள் தங்கள் மதிப்பெண் பட்டியலை results.cbse.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். மாணவர்கள் தங்களின் பதிவு எண் (Roll number), பிறந்த தேதி மற்றும் இதர விவரங்களை உள்ளீடு செய்து தங்களின் மதிப்பெண்களைத் தெரிந்து கொள்ளலாம்.