ரூ.150 கோடி செலவில் உருவான ‘பராசக்தி’ திரைப்படம் வெறும் ரூ.80 கோடியை மட்டுமே வசூலித்தது. ஆனால், தயாரிப்பாளருக்கு எந்த நஷ்டமும் ஏற்படவில்லை என தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ திரைப்படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியானது. எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படமும் பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் சென்சார் பிரச்சனை காரணமாக ‘பராசக்தி’ திரைப்படம் மட்டுமே ரிலீஸானது. என்னதான் சோலோவாக ரிலீஸானாலும் ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவான ‘பராசக்தி’ திரைப்படம் வெறும் ரூ.85 கோடியை மட்டுமே வசூல் செய்ததாக கூறப்பட்டது. ஆனால், இதனால் தயாரிப்பாளருக்கு எந்த நஷ்டமும் ஏற்படவில்லை. அதற்கு காரணம் லாப பகிர்வு (Profit Sharing) முறை தான்.