Arasu media News Update in Tamil 25 April 2026: இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Today Latest News Update: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.84 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.39 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. சி.என்.ஜி. ஒரு கிலோ கிராம் ரூ.91.50 காசுகளுக்கு விற்பனையாகிறது.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் சிரமமின்றி தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்திடவும் வாக்குபதிவு முடித்து சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு திரும்பிடும் வகையில் தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் 14,508 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி 25 மற்றும் 26-ந்தேதிகளில் பொதுமக்கள் சிரமமின்றி சென்னைக்கும் மற்ற ஊர்களுக்கும் பயணம் செய்திட ஏதுவாக 25-ந்தேதி தினசரி இயக்ககூடிய 2 ஆயிரத்து 92 பஸ்களுடன் கூடுதலாக ஆயிரத்து 295 பஸ்களும் முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 2 ஆயிரத்து 500 சிறப்பு பஸ்களும், 26-ந்தேதி சென்னைக்கு தினசரி இயக்க கூடிய 2 ஆயிரத்து 92 பஸ்களுடன் 3 ஆயிரத்து 184 சிறப்பு பஸ்களும் பிற ஊர்களுக்கு 3 ஆயிரத்து 345 சிறப்பு பஸ்களும் என ஒட்டு மொத்தமாக 14 ஆயிரத்து 508 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து தினசரி 50க்கும் மேற்பட்ட லாரிகளில் தக்காளி விற்பனைக்கு குவிந்து வருவது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களாகவே அதன் வரத்து படிப்படியாக குறைந்து வந்த நிலையில் இன்று 30 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்துள்ளது. இதனால் கடந்த வாரம் மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.25-க்கு விற்ற தக்காளி தற்போது ரூ.40 ஆக அதிகரித்துள்ளது. வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் தக்காளி ஒரு கிலோ ரூ.50-க்கு விற்கப்படுகிறது. அதேபோல் வரத்து குறைவால் பீன்ஸ் விலையும் தொடர்ந்து ஏறுமுகத்திலேயே உள்ளது. மொத்த விற்பனையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.90 வரையிலும் வெளிமார்க்கெட்டில் உள்ள கடைகளில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.120 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
