தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் மின் பற்றாக்குறை ஏற்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. தென் மாநிலங்களில் மின் தேவையுள்ள பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ள நிலையில், தட்டுப்பாட்டைச் சமாளிக்க மின் வாரியம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?

தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் மின் பற்றாக்குறை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கோடை வெப்பம் முன்கூட்டியே தொடங்கியுள்ள சூழலில், தென் மாநிலங்களின் மின் தேவை குறித்த ஒப்பீட்டு அறிக்கையை மத்திய மின்துறை வெளியிட்டுள்ளது. 2025-ம் ஆண்டு மார்ச் மாதத்துடன், நடப்பாண்டு (2026) மார்ச் மாத மின் பயன்பாட்டை ஒப்பிடுகையில் தென் மாநிலங்களின் தினசரி மின்தேவை 69,934 மெகாவாட்டிலிருந்து 73,805 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது.