நான் அப்போது அவருக்கு படமே செய்யவில்லை. அவர் சாப்பாட்டில் உட்காந்திருந்தார். மதிய சாப்பாட்டு நேரத்திற்கு தான் என்னையும் வர சொல்லி இருந்தார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு கதை சொல்ல போனபோது, கதையில் கவனம் உங்களுக்கு இருக்காது என்று சொன்னேன். அவருக்கு அப்போது வந்த கோபம் இருக்கே… என்று இயக்குனர் பி.வாசு ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரின் படங்களை இயக்கி வெற்றி கண்டவர் பி.வாசு. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கிய பி.வாசு, கன்னடத்தில் ஆப்தமித்ரா என்ற படத்தை இயக்கி அதே படத்தை தமிழில், சந்திரமுகி என்ற பெயரில் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்கி 800 நாட்கள் படத்தை ஓட வைத்து புதிய சாதனை படைத்திருந்தார்.
பல நடிகர்களை வைத்து படம் இயக்கிய பி.வாசு, நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு கதை சொன்னது குறித்து ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். அதில், சிவாஜி ஐயாவிற்கு கதை சொல்லப் போனேன். அப்போது அவர் சாப்பிட உட்கார்ந்திருந்தார். பன்னீர்புஷ்பங்கள் இயக்கி முடித்தவுடன் இவருக்கு கதை சொல்ல போனேன். நான் அப்போது அவருக்கு படமே செய்யவில்லை. அவர் சாப்பாட்டில் உட்காந்திருந்தார். மதிய சாப்பாட்டு நேரத்திற்கு தான் என்னையும் வர சொல்லி இருந்தார்.
அவர் சாப்பிடும்போது எனக்கு மட்டும் தான் சாப்பாடு இருக்கிறது என்று அவர் சொன்னார். ஆனால் நான் எனக்கு சாப்பாடு வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் அவர், இது என் ஷூட்டிங் அதனால் எனக்கு மட்டும் தான் சாப்பாடு வந்தது. நீ போய் வெளியில் சாப்பிட்டு வா என்று சொன்னார். நான் எனக்கு சாப்பாடு வேண்டாம். கதை சொல்லிவிட்டு சாப்பிடுகிறேன் என்று சொன்னேன். அதன்பிறகு உட்கார்ந்தாரு, சாப்பிட்டு முடிச்சுட்டாரு, முடிச்சுட்டு ஒரு லுங்கி கட்டிக்கொண்டாரும் ஒரு பணியன் போட்டுக்கொண்டாரும் அழகாக உட்கார்ந்தாரு.
உட்கார்ந்த உடனே அவரிடம் நான் கதை சொல்லப் போறேன் சொல்லும்போது டிவி வருகிறது. அதன்பிறகு நான் கதை சொல்ல தொடங்கும்போது அவர் டிவி பார்க்கிறார். அதில் கிரிக்கெட் மேட்ச் ஓடிக்கொண்டு இருக்கிறது, டிவி சவுண்ட் வந்ததால் என்னால் கதை சொல்ல முடியவில்லை. ஆனாலும் முதல் சீன் என்று ஆரம்பிக்கும்போது அவர், என்னடா டிவி வேலை செய்யவில்லையா என்று கேட்டார். உடனே சிகரெட் எடுத்து கையில் வைத்து தட்டினார். நான் மன்னித்துவிடுங்கள் என்று சொன்னேன். அவர் எதற்கு என்று கேட்டார்.
