பாதுகாவலர்களின் பாதுகாப்புடன் வாக்கு மையத்திற்கு உள்ளே சென்ற த்ரிஷாவிடம், மாற்றம் வருமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்.

தமிழக அரசியலில் ஈடுபடாவிட்டாலும், விஜய்யுடன் ஒரு திருமணத்தில் பங்கேற்று இணையத்தில் வைரலாக நடிகை த்ரிஷா இன்று தனது வாக்கை செலுத்திய நிலையில், இது குறித்து விஜய் பாடலுடன் அவர் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் இன்று 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்த நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு 85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் அஜித் முதல் பிரபு வரை திரையுலக நட்சத்திரங்கள், அரசியல் பிரபமுகர்கள் என பலரும் பொதுமக்களோடு வரிசையாக நின்று தங்கள் வாக்கை செலுத்தினர். 

அந்த வகையில் காலை 11- மணிக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள செயின்ட் பிரான்சிஸ் மேல்நிலைப்பள்ளியில் தனது வாக்குச்சாவடிக்கு வந்த நடிகை த்ரிஷா, தனது வாக்கை செலுத்தினார். முன்னதாக அவர் தனது காரில் இருந்து இறங்கும்போதே ரசிகர்கள் கூட்டம் அவரை சூழ்ந்துகொண்டதால் பரபரப்பு அதிகரித்த நிலையில், ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதன்பிறகு பாதுகாவலர்களின் பாதுகாப்புடன் வாக்கு மையத்திற்கு உள்ளே சென்ற த்ரிஷாவிடம், மாற்றம் வருமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்.