விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ள நிலையில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஆகியவை தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளன.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கட்டனார்பட்டியில் இயங்கி வந்த தனியார் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த கோர வெடி விபத்து தொடர்பாகத் தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆகியவை தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளன.