பாபா” படப்பிடிப்பின் போது ரஜினிகாந்திற்கும், கவிஞர் வாலிக்கும் இடையே நடந்த ஒரு நெகிழ்ச்சியான மற்றும் அறிவுப்பூர்வமான சம்பவம் இன்றும் பலரால் வியப்போடு பேசப்படுகிறது.

திரையுலகில் கவிஞர் வாலி பாடல்கள் எழுதி உச்சத்தில் இருந்தபோது, பாடல் ஆசிரியராக பாரதிராஜாவால் அறிமுகம் செய்யபபட்டவர் வைரமுத்து. கவிப்பேரரசு என்று அழைக்கப்படும் வைரமுத்து இளையராஜா ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட முன்னணி இசை அமைப்பாளர்களின் இசையில் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். 

அதேபோல் பல முன்னணி நடிகர்களுக்கும் தனது வரிகள் மூலம் ஹிட் கொடுத்துள்ள வைரமுத்து பாபா படத்தின் போது வாலியை சந்தித்து குறித்து கவிஞர் நெல்லை ஜெயந்தா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். திரையுலகில் கவிஞர்களுக்கும் நடிகர்களுக்கும் இடையே பல சுவாரசியமான மோதல்கள் நடப்பதுண்டு. ஆனால், “பாபா” படப்பிடிப்பின் போது ரஜினிகாந்திற்கும், கவிஞர் வாலிக்கும் இடையே நடந்த ஒரு நெகிழ்ச்சியான மற்றும் அறிவுப்பூர்வமான சம்பவம் இன்றும் பலரால் வியப்போடு பேசப்படுகிறது.

‘பாபா’ படத்திற்காக ஒரு பாடலை எழுதிய கவிஞர் வாலி, அந்த பாடலை ரஜினிகாந்திடம், படித்து காட்ட தயாராகியுள்ளதார். அப்போது அவரை அன்போடு வரவேற்று ரஜினி அமர வைக்க, வாலி, “என்னையா… எப்பவும் பேசிக்கிட்டே இருப்பீங்க, இப்போ நான் பாட்டைப் படிக்கட்டுமா?” என்று கேட்க, அதற்கு ரஜினி, “படிங்கண்ணே!” என்று உற்சாகமாகச் சொல்ல, வாலி ஒரு நிபந்தனை விதிக்கிறார்: “நான் பாட்டை வாசிச்சு முடிக்கிற வரைக்கும் நீங்க எழுந்து போகக்கூடாது, சரியா?” என்று கேட்க, ரஜினியும் “சரி” என்று சொல்லிவிட்டுப் பாடலைக் கேட்கத் தயாராகிறார்.

அப்போது வாலி பாடலின் முதல் வரியை வாசிக்கத் தொடங்கிய அதே நொடி, ரஜினியின் உதவியாளர் வந்து காதில் ஏதோ கிசுகிசுக்கிறார். உடனே ரஜினி வாலியிடம், “ஒரே நிமிடம் அண்ணே, இதோ வந்துடுறேன்” என்று கூறிவிட்டு வெளியே செல்கிறார். அங்கே வரவேற்பறையில் கவிப்பேரரசு வைரமுத்து வந்திருந்தார். அவரும் அப்படத்திற்காக ஒரு பாடல் எழுதியிருந்தார். அவரை வரவேற்று அமர வைத்துவிட்டு, மீண்டும் வாலி இருக்கும் அறைக்குள் வந்த ரஜினி, சிங்கமும் புலியும் இன்னைக்கு சந்திக்கப் போகுது என்று கூறியுள்ளார்.

ரஜினி சொன்னதைக் கேட்ட வாலி, “என்னையா… வைரமுத்து வந்திருக்காரா?” என்று கேட்டுவிட்டு, “சிங்கமும் புலியும் சந்திக்கப் போகுதுன்னு சொன்னீயே… எங்களில் யார்யா சிங்கம்? என்று வாலி கேட்க, ரஜினி திகைத்துப் போனார். சிங்கம் பெரியதா அல்லது புலி பெரியதா என்று யோசிப்பதற்குள், வாலி சிரித்துக்கொண்டே “நான்தாயா சிங்கம்! ஏன்னா எனக்குத்தான் தாடி இருக்கு!” என்று தனது பாணியில் நக்கலாகச் சொல்லி அங்கிருந்தவர்களைச் சிரிக்க வைத்துள்ளார்.