நான் ஒரு இதய நோயாளி என்னைத் தற்காத்துக் கொள்ள முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரினார்.

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் தனது கடைசி படம் என்று அறிவித்துள்ள ஜன நாயகன் திரைப்படம், ஆன்லைனில் கசிந்தத விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவாகரம் தொடர்பாக முக்கிய நபர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு குறித்து கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.குமரப்பன் முன்னிலையில் ஆஜரான தயாரிப்பு நிறுவனத்தின் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன், முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார். இத்தகைய ஆட்சேபனைகளைத் தெரிவிக்க ஏதுவாக, தங்களை இந்த வழக்கில் ஒரு தரப்பாக இணைத்துக் கொள்ளும் வகையில் ‘இம்ப்ளீடிங்’ (Impleading) மனுவைத் தாக்கல் செய்யுமாறு தயாரிப்பு நிறுவனத்திற்கு நீதிபதி அறிவுறுத்தினார். 

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டைச் சேர்ந்த 41 வயதான டி.உமாசங்கர் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், இந்த மாத தொடக்கத்தில் தயாரிப்பு நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை அசோக் நகர் காவல்துறையினர் எப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்துள்ளனர். மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தால் இன்னும் சான்றிதழ் அளிக்கப்படாத நிலையில், ஜனநாயகன் திரைப்படம் ஆன்லைனில் கசிந்ததாகக் கூறி பாரதிய நியாய சன்ஹிதா, தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 மற்றும் காப்புரிமைச் சட்டம் 1957 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.