வீடியோ கான்பரன்ஸிங் மூலம் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணையை ஜூன் 15ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

விஜய் – சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கு, ஜூன் 15-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், இது எப்போதோ இருவருக்கும் இடையெ சமரசமாகி கையழுத்தான விஷயம். ஆனால் இப்போது வெளியில் கொண்டுவந்து பர்னல் அட்டாக் செய்கிறார்கள் என்று விஜய் அப்பா எஸ்.ஏ.சி ஒரு பேட்டியில் கூறியுள்ளார். 

தமிழக சட்டசபை தேர்தலில் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மூலம் சந்திக்க தயாராகி வரும் விஜய், கட்சி தொடங்கியது முதல் பல தடைகளையும், சர்ச்கைகளையும் சந்தித்து வருகிறார். இதில் கரூர் சம்பவம் அவரது அரசியல் வாழ்க்கையில் தீராத ஒரு சம்பவமாக மாறியுள்ளது. அதற்கு அடுத்தடியாக அவரது தனிப்பட்ட வாழ்க்கை கேள்விக்குறியாக மாறியுள்ளது, அவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட சங்கீதா அவரிடம் இருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். 

இந்த மனு மீதான விசாரணை நேற்று (ஏப்ரல் 20) நடைபெற்ற நிலையில், அடுத்தக்கட்ட விசாரணை ஜூன் 15-ந் தேதி நடைபெறும் என்று செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்த விவாகரத்து வழக்கில் சங்கீதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 12 பக்க மனுவில், ஜீவனாம்சம் மற்றும் நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வசிப்பதற்கான உரிமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை குறிப்பிட்டுள்ளார். விசாரணையில் இருவரும் ஆஜராகாத நிலையில், இரு தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுவில், விஜய், சங்கீதா ஆகிய இருவரும் பொதுவெளியில் பிரபலமானவர்கள் என்பதால் நேரில் ஆஜராக பாதுகாப்பு மற்றும் இதர பிரச்னைகள இருக்கிறது. இதனால், வீடியோ கான்பரன்ஸிங் மூலம் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணையை ஜூன் 15ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். அதே சமயம், இந்த விவாகரத்து வழக்கு தொடர்பான மனு பொதுவெளியில் வெளியானதில் இருந்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது. 

இந்த விமர்சனங்கள் குறித்து பதில் அளிக்கும் வகையில், விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “விஜய் பெண்களுக்கு எதிரானவர், குடும்பத்திற்கு எதிரானவர், பெற்றோருக்கு எதிரானவர் என அவரின் குணாதிசயங்களை சிதைக்கும் வேலையை செய்கின்றனர் சிலர். அது அவர்களுக்கு கைவந்த கலை. அது தான் பெர்சனல் அட்டாக். எப்போதோ நடந்து, எப்போதோ இருவருக்குள்ளும் சமரசமாகி கையெழுத்தான விஷயத்தை இப்போது கொண்டுவர வைத்துள்ளார்கள். 

மற்றவர்களின் குணாதிசயங்களை சிதைக்கும் வேலையை செய்வதில் அவர்கள் பி.ஹெச்.டி முடித்தவர்கள். முடிந்த ஒரு விஷயம் வெளியே வருகிறது அதுவும், இந்த நேரத்தில் வெளிவருகிறது என்றால் அதற்கு எதிர்கட்சிகளை தவிர வேறு யார் காரணமாக இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.