தமிழ்நாட்டின் வளர்ச்சியைக் கண்டு டெல்லியில் உள்ளவர்களுக்கு “வயிற்று எரிச்சல்” ஏற்படுகிறது. நான் முதல்வன்” திட்டத்தைக் கொண்டு வந்தவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் மூன்றாவது முறையாகப் போட்டியிடும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை ஆதரித்து, மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் இன்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.