தன் மகள் இறந்த பின்னர் எந்தக் கோயிலுக்கும் போக வேண்டாம், யாரையும் பார்க்க வேண்டாம் என்று இருந்ததாக பாடகி சித்ரா கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி பாடகியாக இருந்து வருபவர் கே.எஸ்.சித்ரா. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், ஒரியா, இந்தி, ஆசாமி, வங்காளம் உள்ளிட்ட பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளார். ரசிகர்களால் சின்னக்குயில் என அழைக்கப்படும் சித்ரா கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் முன்னணி பின்னணி பாடகியாக இருந்து வருகிறார்.
நேரம் பார்த்து அடித்த கிம் ஜாங் உன்… பறந்து வந்த ஏவுகணைகள்; டிரம்பிற்கு எச்சரிக்கையா?
சித்ரா இதுவரை 6 முறை தேசிய விருதுகளையும், 6 முறை தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதுகளையும், பல்வேறு மாநில விருதுகளையும், இந்தியாவின் மிக உயரிய பத்மவிபூஷண் விருதையும் பெற்றுள்ளார். கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை பூர்வீகமாகக் கொண்ட சித்ரா, 1988 -ஆம் ஆண்டு விஜய் சங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
