1985 இறுதியில் இளையராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் இடையே ஏற்பட்ட விரிசல் காரணமாக இருவரும் பிரிந்தனர்.

தமிழ் சினிமாவில், கண்ணதாசன் – வாலி ஆகிய கவிஞர்களுக்கு அடுத்து பாடல்களில் முத்திரை பதித்தவர்களில் முக்கியமானவர் கவிஞர் வைரமுத்து. கவிப்பேரரசு என்று அழைக்கப்படும் இவர், பாரதிராஜா இயக்கத்தில் 1980-ம் ஆண்டு வெளியான நிழல்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், படத்தில் வைரமுத்து எழுதிய பொன்மாலை பொழுது பாடல் இன்றைக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தில் இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றிய வைரமுத்து அடுத்த 5 வருடங்கள் 1985-ம் ஆண்டுவரை அவருடன் பணியாற்றினார். இந்த கூட்டணியில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து.. ஆனால் 1985-ம் ஆண்டு இந்த கூட்டணி பிரிந்தது, அதன்பிறகு இளையராஜா ஹிட் பாடல்களை கொடுத்தாலும், வைரமுத்துவுக்கு பாடல்கள் மூலம் புகழ் என்பது எட்டாக்கனியாக மாறியுள்ளது. புகழ் கிடைக்கவில்லை என்றாலும் வருமானம் அதிகமாக இருந்துள்ளது.
அதே சமயம், இளையராஜாவுடன் பிரிந்த 7 ஆண்டுகள் பெரும் போராட்டமாக இருந்தது என்று வைரமுத்து கூறியதாக பிரபல இயக்குனரும் பத்திரிக்கையாளருமாக சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர். கவிப்பேரரசு வைரமுத்துவின் வளர்ச்சி அசுரத்தனமானது. வைரமுத்து இளையராஜாவுடன் பணியாற்றிய 1980 முதல் 1985 (27 முதல் 32 வயது வரை) வரையிலான அந்த 5 ஆண்டுகளைத் தனது வாழ்வின் மிக முக்கியமான காலமாக கருதுகிறார்.
அந்தக் காலகட்டத்தில் என்னிடமிருந்த துடிப்பு, சாதிக்க வேண்டும் என்ற வெறி, தமிழுக்கு இருந்த காதல் என எல்லாம் சேர்ந்து எனக்குள் ஒரு புயலை உண்டாக்கியது. இளையராஜா ஹார்மோனியத்தில் விளையாடினால், நான் பேனாவால் விளையாடுவேன். பாரதிராஜா, இளையராஜா, நான் ஆகிய மூவருக்கும் அப்போது ஒரே உணர்வு, ஒரே வெறி இருந்தது என்று வைரமுத்து கூறியுள்ளார். தொடர்ந்து 1985 இறுதியில் இளையராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் இடையே ஏற்பட்ட விரிசல் காரணமாக இருவரும் பிரிந்தனர்.
அதன்பின் 7 ஆண்டுகள் வைரமுத்துவுக்குப் போராட்டமான வாழ்க்கை அமைந்தது. படங்களிலிருந்து தூக்கி எறியப்பட்டு நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது, எனக்கான கப்பல் எங்கிருந்தாவது வரும் என்று நம்பினேன். பிழைப்புக்காக மொழிமாற்றுப் படங்கள் (டப்பிங்) என்ற கட்டுமரத்தைப் பிடித்துக்கொண்டு போராடினேன். அந்த நேரத்தில் ரஜினிகாந்தின் மனிதன், ராஜா சின்ன ரோஜா போன்ற படங்களில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது.
இறுதியாக 1992-ல் ஏ.ஆர். ரஹ்மான் என்ற “சர்வதேசக் கப்பல்” மணிரத்னம் என்ற மாலுமி மூலம் வைரமுத்துவை வந்தடைந்தது. அதன்பின் அவர் தொட்டதெல்லாம் பொன்னானது. புகழுக்காகவோ பொருளுக்காகவோ நான் என்றும் பாட்டெழுத மாட்டேன். என் கவிதையும் பாட்டும் என் உடம்பும் மனசும் உடன்பட்டால் மட்டுமே உருவாகும்,” என்று வைரமுத்து உறுதியுடன் கூறியதாக சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார்.
