சந்தானம் வீட்டை பார்த்த அடுத்த சில நிமிடங்களில் தெரிந்த ஒருவரின் ஜே.சி.பியை வர வைத்து சில மணி நேரங்களில் வீட்டை இடித்து தரைமட்டமாக்கிவிட்டான்.

 திரையுலகில் நெருங்கிய நண்பர்கள லிஸ்ட் எடுத்துக்கொண்டால் அதில் முக்கிய இடத்தில் ஆர்யா சந்தானம் நட்பு இருக்கும். அந்த அளவிற்கு திரைத்துறையை கடந்து ரியல் வாழ்க்கையில் இவர்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். ஆர்யா தயாரிப்பில் சமீபத்தில் டிடி நெக்ஸ்ட் லெவல் என்ற படத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்திருந்தார். இவர்களுடன் இப்படி நெருங்கிய நட்பு இருப்பதால் தான் சந்தானத்தின் வீட்டை இடிக்க ஆர்யா ப்ளான் போட்டு கொடுத்துள்ளார். 

டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சந்தானம், பழைய வீட்டுடன் கூடிய நிலத்தை வாங்கி அந்த வீட்டை ரெனோவேட் செய்து குடியேற வேலைகள் நடந்து வந்தது, அப்போது ஒருநாள் ஆர்யாவிடம் இந்த வீட்டை காட்டினேன். அதை பார்த்த ஆர்யா, “இதெல்லாம் உனக்கு செட் ஆகாது மச்சி என்று சொல்லி வீட்டை இடித்துவிடு என்று சொன்னார். அடுத்த சில நிமிடங்களில் தெரிந்த ஒருவரின் ஜே.சி.பியை வர வைத்து சில மணி நேரங்களில் வீட்டை இடித்து தரைமட்டமாக்கிவிட்டான். 

அந்த வீட்டில் தினமும் எங்க அம்மா விளக்கு வைப்பாங்க, வீட்டை இடித்த அவர் போனபோது வீடு இல்லாதததால், எனக்கு போன் செய்து கேட்டாங்க, ஆர்யா வந்தான் வீ்டு வாஸ்து சரியில்லைனு சொல்லி இடிக்க சொல்லிட்டான்மா இடிச்சிட்டோம் என்று சொன்னேன். இதை கேட்ட அவர் படத்துல தானடா இப்படி பண்ணுவீங்க, இப்போ நிஜத்திலும் பண்ண ஆரம்பிச்சிட்டீங்களா என்று கேட்டாங்க, அந்த அளவுக்கு பண்ணிட்டான் என்று சந்தானம் கூறியிருந்தார். அன்று சந்தானம் சொன்ன தகவலுக்கு தற்போது ஆர்யா விளக்கம் அளித்துள்ளார்.   

விஜ.ஜே.சித்துவின் பார்ட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆர்யாவிடம் இது பற்