1945 ஆண்டு மார்ச் ஏப்ரல் மாதங்களில் அமெரிக்க துருப்புகள் ஜப்பானிய நிலப்பரப்பின் அருகில் உள்ள யோகினோவா தீவுகளை பிடிப்பதற்காக கடும் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது.  புகழ்பெற்ற ராணுவ தளபதியான ஜெனரல் மெக்கார்தர் தனது “ஐலண்ட் ஹாபின்ங்”  யுக்தியின் மூலம் ஒவ்வொரு தீவாக கைப்பற்றி இறுதியாக ஜப்பான் மீது ஒரு நேரடியான தாக்குதலை நடத்த வழி ஏற்படுத்தி கொண்டிருந்தார் ….

இரண்டாம் உலக போரில் மிக அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்திய ஒரு கொடுமையான ராணுவ நடவடிக்கையாக இது பதிவு செய்யப்படுகிறது.

.ஆனால் இந்த ராணுவ நடவடிக்கைக்கு  பெயரளவில் ஏற்றுக்கொண்டு ஒப்புதல் கொடுத்த ஜனாதிபதி அலுவலகத்தில் கோபமும் ஆத்திரமும் உச்சிக்கு சென்று கொண்டிருந்தது.  அமெரிக்கா ஒரு பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது.  அது வழக்கமான யுத்த நடவடிக்கையாக இருப்பதில் அமெரிக்கா தலைமைக்கு விருப்பமில்லை

உண்மையிலேயே பழி வாங்க வேண்டும்.  இதுவரை உலகம் பார்க்காத வகையில் பழி வாங்க வேண்டும்.  அடுத்த ஒரு மாதத்திலேயே ஜப்பானின் இரண்டு நகரங்கள் மீது அணு குண்டுகள் வீச முடிவெடுக்கப்பட்டு. அமெரிக்கா தரைப்படையின் ராணுவ நடவடிக்கை திரும்பபெறப்பட்டது

இதில் உலக அதிசயமாக நடந்த இன்னொரு சம்பவம் ஜப்பான் அமெரிக்காவிடம் முழுமையாக சரணாகதி அடைந்தது..!  ஆம் வரலாற்றில் அதுவரை சரணடைவது என்பது அவர்கள் யுத்த நியதிலேயே இல்லாத ஒன்று.  அமெரிக்கா அதை சாதித்து காட்டியது.

ஒரு சாதாரண யுத்த நடவடியலேயாள் ஜப்பானை பழி வாங்க வழி இருக்கும்போது மிக கொடூரமான ஒரு வழியை அணுஆயுத பிரயோகத்தை அமெரிக்கா ஏன் கையாண்டது ..?

இதன் விளைவுகளை பற்றி அமெரிக்கா தலைமை கொஞ்சம் கூட கவலை படவில்லை அதை சந்திக்கவும் தயாராக இருந்தது ஆனால் விளைவுகள் அவர்களுக்கு சாதகமாகவே இருந்ததால் அவர்களின் தன்னம்பிக்கையும் அதிகமானது

மேற்குலகை அச்சுருச்சித்தியை இந்த கோரமான போர் அத்துடன் முடிவிற்கு வந்தது மேலும் சரணடைந்து அறியாத ஜப்பான் அடிபணிந்து. இந்த இரண்டு விளைவுகளும் அமெரிக்காவிற்கு சாதகமாகவே அமைந்ததால் அவர்கள் தன்னம்பிக்கை அதிகமானது.

இத்தனைக்கும் காரணம் ” பேர்ல் ஹார்பர் ” . 

அமெரிக்காவின் பேர்ல் ஹார்பர் சம்பவம் அமெரிக்கா வரலாற்றில் இன்று வரை அதன் ராணுவ நடவடிக்கை மற்றும் வியூகத்தை நிர்ணயம் செய்யும் சம்பவமாக இருக்கிறது இனி ஒரு முறை கூட அமெரிக்காவை ஒரு ராணுவ நடவடிக்கை மூலம் யாரும் ” சர்ப்ரைஸ் ” செய்து விட கூடாது என்பது பேர்ல் ஹார்பர் கற்றுக்கொடுத்த பாடம் என்பது மட்டுமல்ல இது அமெரிக்கா பாதுகாப்பு அமைப்பின் மிக தீவிரமான யுத்த கொள்கை.

அமெரிக்காவின் பிரபலமான ” ப்ரீ – எம்ப்டிவ் ” பாலிசி ( Pre – Emptive Policy ) பிறந்தது இப்படித்தான்.  அது ராணுவ தலைமையகமான பெண்டகனாகட்டும், உளவு அமைப்பான சி ஐ எ வாகட்டும் , ஜனாபதிபதியாக பொறுப்பேற்கும் எந்த ஒரு கட்சியை சேர்ந்த அதிபராகட்டும் அமெரிக்கா ராணுவ கொள்கை என்பது உலக அரசியலை பொறுத்த வரை எப்போதுமே         “ முற்பட்டுக்கொள்ளுதல்” Pre Emptive தான்.

ஆபத்துகளையும் எதிரிகளையும் அது சிறியதாக இருக்கும்போதே கண்டறிந்து அவர்களை நிர்மூலமாக்குவது.  அதை மூன்று படிநிலைகளில் சாதிக்கிறது அமெரிக்கா, முதலில் பொருளாதார தடைகள், அதற்கு பணியவில்லையென்றால் அரசாங்கத்தை மாற்றுவது, அதிலும் வெற்றி இல்லையென்றால் மறைமுக யுத்தம் , தேவைப்பட்டால் நேரடியாக ஒரு தரைப்படை யுத்தம்.  ( இதில் முதல் இரண்டு நடவடிக்கைகளுக்கு இந்தியாவும் பலியாகி இருக்கிறது..! )

இதில் விளைவுகளை பற்றி அமெரிக்கா பாதுகாப்பு அமைப்பு கவலை கொள்வதில்லை ஏனென்றால் விளைவுகளை உருவாகும் ஆபத்து என்கிற ஒன்றையே நாம் நேரடியாக களைய முற்படுகிறோம் அல்லவா..!

ஒருவேளை விளைவுகள் ஏற்பட்டாலும் அதை சில நேரங்களில் துணிச்சலாகவும் சில நேரங்களில் தந்திரமாகவும் எதிர்கொள்ளும் திறன் அதன் உளவியலில் பேர்ல் ஹார்பருக்கு  பிறகு அவர்களின் அரசு ராணுவ கட்டமைப்பில் இயல்பாகவே கலந்து விட்டது.  

ஆனால் விளைவுகளின் தீவிரத்தை வைத்து எப்போதும் அவர்கள் இந்த பர் எம்ப்டிவ் பாலிஸியை ஐ கைவிட்டதே இல்லை

ஜான் எப் கென்னடி ஜனாதிபதியாக  இருந்த காலத்தில் கியூபா மீது ஒரு ராணுவ நடவடிக்கை திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டது ஆனால் அவர்கள் எதிர்பாராத விதமாக ருசியா அணுஆயுதம் தாங்கிய கப்பல் அமெரிக்கா கடல் எல்லைக்கு அருகில்  வந்து நின்றபோது உலகம் பயந்து நிசப்தமானது.

ஆனால் அமெரிக்க தலைமை ஒருபோதும் பின்வாங்கவில்லை அமெரிக்கா ராணுவ அணு ஆயுத கப்பல்களம் தயார் நிலையில் இருந்தது.  ” இங்கு இரு எதிரிகள்  ஒருவர் கண்களை இன்னொருவர்  பார்த்து கொண்டு சண்டைக்கு தயாராக இருக்கிறார்கள்.. யார் முதலில் கண்ணை சிமிட்டுகிறார்கள் என்பதை பொறுத்து வெற்றி தோல்வி நிர்ணயிக்க படும் ..நிச்சயமாக அமெரிக்கா கண் சிமிடாது ” என்றார்

வியட்நாமில் அமிரிக்கா தரைப்படை கடும் சவால்களை சந்தித்து மிக அவமானகரமான ஒரு தோல்வியை சந்தித்தது ஆனால் பென்டகன்தான் தோற்றதே தவிர சி ஐ எ சில ஆண்டுகளில் வியட்நாமை ஜெயித்து விட்டது…!

ஆம் கோகோ கோலா, பெப்சி வியட்நாம் சந்தைகளை  ஆக்கிரமிக்க ஆரம்பித்து விட்டது…! 

ஈராக் மீதான யுத்தமும் இதே அடிப்படையில் தான் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் புஷ் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மீண்டும் ஒரு பேர்ல் ஹார்பர் சம்பவம் நடந்தது.  செப்டம்பர் இரட்டை கோபுர தாக்குதல்கள் (9/11).  இந்த சம்பவத்தில் அமெரிக்கா இன்னொரு புதிய பாடத்தை கற்றுக்கொண்டது அது தற்போது டிரம்ப் காலத்தில் தீவிரமாக விவாதித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட அமெரிக்கா  பிரஸ்ட் பாலிசி ( America First Policy)

மத்திய கிழக்கில் அமெரிக்கா துருப்புகள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று அமெரிக்கா மக்களாலேயே அதிகம் வேண்டுகோள் வைக்கப்பட்டது இந்த இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு ஆப்கானிஸ்தான் நடவடிக்கைக்கு பிறகு தான.  இதில் அமெரிக்கா மிக பெரிய அளவில் பொருளாதார மற்றும் மனித வளத்தை இழந்தது.

ஒபாமா நிர்வாகத்தில் ஒசாமா பின் லாடனை கொலை செய்து பழி தீர்த்த அடுத்த நாளே அமெரிக்கா நிர்வாகம் இந்த முடிவை எடுத்து விட்டது அதனால் தான் அதற்கு பிறகு ஏற்பட்ட அரபு வசந்த புரட்சியில் மத்திய கிழக்கு பற்றி எறிந்த போது அமெரிக்கா துருப்புகள் விடுமுறையை அனுபவித்து கொண்டிருந்தது .  இது அமெரிக்கா ராணுவத்தின் இயல்பு அல்ல ஒரு வேளை அமெரிக்கா தரை படை நேரடியாக தலையிட்டு இருந்தால் அரபு வசந்தத்தின் நீட்சியான சிரியா யுத்தம் ஒரு மாதத்தில் முடிவிற்கு வந்திருக்கும்.

அல்லது ISIS மிக சீக்கிரம் முடிவிற்கு வந்திருக்கும் ஆனால் அமெரிக்கா கூட்டு படைகளோடு இணைந்து தான் செயல்பட்டது தளவாட மற்றும்ம் நுண்ணறிவு ஆதரவை மட்டுமே கொடுத்து வந்தது.

இன்றைக்கு அமெரிக்கா கற்றிருக்கும் இரண்டு பாடங்கள் ஒன்று தேசிய பாதுகாப்பில் எப்போதும் முற்பட்டு கொள்ள வேண்டும், இனொன்று மனித வளம் பொருளாதாரத்தை காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.  இந்த இரண்டு பாடங்களை அடிப்படையாக வைத்தே அரை நூற்றாண்டுகளுக்கு மேல் அமெரிக்கா தனது வெளியுலக அரசியல் கொள்கையை வகுத்து வருகிறது

தற்போது இரான் அமெரிக்காவின் கோப பார்வையில் வந்திருக்கிறது இதன் விளைவுகள் என்னவாக இருந்தாலும் அமெரிக்கா தனது இரண்டு கொள்கைகளை விட்டு பின்வாங்கப்போவதில்லை.